இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் தங்களுடைய வேலை இழந்து பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர், இதனால் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது கணிசமான அளவில் உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே துறையில் உள்ள 60 பிரிவுகளில் மொத்தம் 2 லட்சத்து ,2652 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன .
நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும் சூழலில் இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வேலை தேடுவோர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.