நபர் ஒருவர் ஆபத்தான வகையில் கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சிக்கி சிறைக்கு செல்வதிலிருந்து நீதிபதி காப்பாற்றியுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த Gurdeep Notay என்பவர் வேகமாக கார் ஒட்டி ஒரு பெண்ணின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக்கு செல்ல இருந்த அவரை தற்போது Gurdeep ஜெயிலுக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அவரை தற்போதும் ஜெயிலில் அடைக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து நீதிபதி கூறுகையில், “Gurdeep திருமணமாகி இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரோடு கஷ்டப்பட்டு வருகிறார்.
தற்போது அவருக்கு மூன்றாவதாகவும் குழந்தை பிறக்க போகிறது. இந்நிலையயில் சிறையில் அடைத்தால், அவர் குழந்தைகளை யார் பார்ப்பார்கள்?. எனவே குழந்தைகளுக்காக தான் ஜெயிலில் அடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் காவல்துறை கண்காணிப்பில் இருப்பார்” என்று கூறியுள்ளார். அவருக்கு தீர்ப்பளித்த நீதிபதி “நீங்கள் தவறு செய்தவர் தான். ஆனால் உங்களால் உங்கள் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி தான் உங்களை ஜெயிலுக்கு அனுப்பவில்லை” என்று கூறினார்.