தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.மேலும் வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் பலத்த காற்று வீசி கொண்டிருப்பதால் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.