நடிகை திரிஷா குதிரையேற்ற பயிற்சியை முறையாகப் பயின்று அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலக பிரபல நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களுடன் ஹிட் படங்கள் கொடுத்தவர். திரிஷா சாகசங்களில் செய்வதில் ஆர்வம் கொண்டவர். வானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் , ஆல் கடலில் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் என பல சாகசங்களை ஆர்வத்தோடு செய்துள்ளார். தற்போது இவர் குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்து இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்று அசத்தியுள்ளார் .
திரிஷா இந்த பயிற்சியை மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பயின்றுள்ளார். குதிரையேற்ற பயிற்சியை முறையாகப் பயின்று அதற்கான சான்றிதழையும் பெற்ற திரிஷாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.