கோவையில் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் மாணவியும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இயல்பாக பேசிக்கொள்வது போல் உள்ளது. இந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரிடம், மேலும் 2 மாணவிகளிடமும் நீங்கள் இதே போல் பேசியதாக மாணவிகள் கூறுகிறார்கள் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியர், சத்தியமாக நான் அவர்களிடம் அப்படி பேசவில்லை என்கிறார்.
தொடர்ந்து மாணவி, எனக்கு தூக்கமே வர மாட்டுது, அதை எல்லாம் நினைத்தால். இது குறித்து நான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல போறேன் என்கிறார். ஆசிரியர் இது ஒரு விபத்து, நானும் தூங்கி ரொம்ப நாள் ஆகிருச்சு என்கிறார். மாணவி விடுங்க, எனக்கு எப்படி இருக்கும் என உங்களுக்கு புரியவில்லை என கூறி போனை வைத்துள்ளார். இது தவிர, மாணவி, ஆசிரியருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்-களில் மாணவி, ஆசிரியரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்நிலையில், போலீசார் போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஆதாரமாக வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.