நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறையை அங்கீகரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 10 முதல் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ்டூ மதிப்பெண் வழங்க அங்கீகாரம் செய்து, மதிப்பெண் மதிப்பீட்டு முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.