Categories
உலக செய்திகள்

2 நாள் பயணம்…. இந்தியாவிற்க்கு வரும் இங்கிலாந்து பிரதமர்… வர்த்தகர்களுடன் சந்திப்பு….!!!!!

இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் வருகின்ற  21ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி  பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுபற்றி டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார்.

அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமர் ஒருவர் குஜராத்துக்கு வருவது இதுவே முதல் முறையாகும். குஜராத்தில் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களையும், இந்தியாவில் முக்கிய தொழில்களில் முதலீடுகள் குறித்த அறிவிப்பை  போரிஸ் ஜான்சன் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த நாள் 22ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார். இருதலைவர்களும் பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை பற்றி  பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள்.

அப்போது இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை செய்யப்படும். மேலும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 2035ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 28 பில்லியன் பவுண்டுகள் அளவு உயர்த்த திட்டமிட்டிருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக  போரிஸ் ஜான்சன் வெளியிட்ட பதிவில், ‘எனது இந்தியப் பயணத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரை மிகவும் முக்கியமான விஷயங்கள் வளர்ச்சி பெறும்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |