இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய படையெடுப்பை எதிர்த்து சிங்கப்பூருக்கு ஆதரவாக இலங்கை, இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போர் புரிந்து உயிர் நீத்தனர். இவ்வாறு உயிர் நீத்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள கிரஞ்சி பகுதியில் போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவனே அந்த நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியா சிங்கப்பூர் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது..
Categories
2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்ற இந்திய ராணுவ தளபதி….!! இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை…..!!!!
