Categories
உலக செய்திகள்

2 நாட்டையும் இணைத்து விட்டீர்கள்…. “மத்திய அரசை சாடிய ராகுல்”…. எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா..!!

மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த  புதன்  கிழமை  குடியரசுத் தலைவரின் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் தேசிய அளவில்  பின்பற்றப்பட்டுள்ள   குறைபாடுகளுடைய  கொள்கைகளால் இருவேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசிய அவர்,”பாகிஸ்தானையும் சீனாவையும் ஓன்றாக இணைத்துள்ளீர்கள்” . மேலும் இது  இந்திய மக்களுக்கு எதிராக நீங்கள் செய்திருக்கும்  மிகப்பெரிய குற்றம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த  உரைக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  குறித்து  ராகுல் காந்தி பேசியதை   ஆதரிக்க வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய  அமெரிக்க  வெளியுறவுத்துறை செய்தி  தொடர்பாளர் நேட்  பிரைஸ், பாகிஸ்தான் , சீனாவிற்கு இடையேயான உறவைப் பற்றி பேசுவதை அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அந்தக் கருத்துக்களை நிச்சயமாக நங்கள்  ஆதரிக்க மாட்டோம்  எனவும் ,இதில் அமெரிக்கா வேண்டுமா? அல்லது சீனா வேண்டுமா ? என்பதை நாடுகள் தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை  இருப்பினும், அமெரிக்க  கூட்டாண்மை  பல நன்மைகளைகொண்ட  நாடாக  இருக்கிறது  .அதிலும் குறிப்பாக   அமெரிக்காவின் வியூக  ரீதியான கூட்டு நாடாக பாகிஸ்தான்  விளங்குகிறது.

உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில்    தேர்வு செய்ய வேண்டியதில்லை  என்பதை எல்லா  நேரங்களிலும்  தெரிவித்துள்ளோம்.  மேலும் மற்ற நாடுகள் அமெரிக்காவுடன் எந்த மாதிரியான உறவு  இருக்க வேண்டும் என்று வரும்போது அவர்களுக்கு தேர்வுகளை வழங்குவது எங்களின் நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |