பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் அரியானா மாநிலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை அடித்து உடைக்குமாறு துணை கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் காவல்துறையினரிடம் பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் அந்த அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரியான ஆயுஷ் சின்கா கூறுகையில், “இரண்டு நாட்களாக தூங்காமல் வேலை செய்ததால் இப்படி நடந்து கொண்டதாக” தெரிவித்துள்ளார். ஆனால் விவசாயிகள் 365 நாட்கள் தூங்கவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.