எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி aug21 முதல் 2 நாட்களுக்கு எச்டிஎஃப்சி வங்கியின் ஆன்லைன் சேவைகள் இயங்காது என்ற வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கு எச்டிஎஃப்சி வங்கி யின் ஆன்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
அதன்படி நேற்று இரவு 9 மணி முதல் இன்று பிற்பகல் 3 மணி வரை 18 மணி நேரத்திற்கு நெட் பேங்கிங் சேவைகள் பயன்படுத்த முடியாது. வங்கியின் ஆன்லைன் அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 18 மணி நேரத்திற்கு மட்டும் நெட் பேங்கிங் தளத்தில் கடன் தொடர்பான சேவைகளை பயன்படுத்த முடியாது. எச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் பராமரிப்பு பணி நேரத்திற்கு ஏற்ப நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்துவது நல்லது.