தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.