Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் பரபரப்பு வீடியோ… கொடூரத்தின் உச்சம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் குணா என்ற மாவட்டத்தில் பழங்குடி பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற கடத்திச் சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஆண் ஒருவரை அந்தப் பெண்ணின் தோள்பட்டையில் மீது ஏற்றி அமர வைத்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து அடித்து துன்புறுத்தி அவமானப் படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பாதிக்கப்பட்ட பெண் தோள்பட்டையில் ஆண் ஒருவரை சுமந்து கொண்டு நடந்து செல்கிறார். அவரின் பின்னால் ஒரு கும்பல் கட்டை மற்றும் பேட் உடனே அவரை படித்துக்கொண்டே விரட்டி செல்கின்றனர். இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

https://twitter.com/PoonamPanditt/status/1361349425512083458

Categories

Tech |