கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்கள் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அல்லது தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அதில் நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.