Categories
தேசிய செய்திகள்

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்… பெற்ற தாயே உடந்தையாக இருந்த கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!!

இரண்டு சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறைதண்டனை விதித்து பால்கர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள 2 சகோதர சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதற்கு அச்சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது. இவ்வாறு பெற்ற தாயே  இந்தக் கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததால் அச்சிறுமிகள், யாரிடமும் இதைப் பற்றி  கூற முடியாமல் தவித்து வந்திருக்கின்றனர். ஒருக்கட்டத்தில் இதனால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடினார்.

அதன்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர். அத்துடன் பால்கர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின் விசாரணை முடிவில் வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது. அதனை தொடர்ந்து வாலிபருக்கு சாகும்வரை சிறைதண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Categories

Tech |