Categories
மாநில செய்திகள்

2 குழந்தைகள் பெற்ற பின்னர்….. ஆணாக மாறிய இளம்பெண்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

சென்னையில் வசித்து வரும் 36 வயதுடைய ஒரு இளம் பெண் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறி இருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த 2 குழந்தைகளிடமும் தன்னை அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை தருண் என மாற்றிக் கொண்டார். இதையடுத்து 27 வயதில் திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் 2 ஆண் குழந்தைகளுக்கு தாயான பின்னர்தான் ஒரு ஆணாக மாறி இருப்பதே தருண் உணர்ந்தார்.

இதையடுத்து கணவரிடம் இதைப்பற்றி எடுத்து கூறியுள்ளார். அவரும் அதை ஏற்றுக் கொண்டு நண்பன் போல் பழகி வருகிறார். ஆனால் சமூகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் விவாகரத்து ஆனது. தற்போது 2 குழந்தைகளும் இருவரது பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. இதுதொடர்பாக தருண் வேதனையுடன் கூறியிருப்பதாவது, பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாறுவதையும், ஆணாக பிறந்தவர் பெண்ணாக மாறுவதையும், இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன தவறு இருக்கிறது. உடலில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும்.

திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் ஆணாக மாறியதை உணர்ந்தேன். இதை என் கணவரிடம் கூறினேன் அவரும் என்னை ஏற்றுக் கொண்டார். இருந்தாலும் இந்த சமூகம் அதை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நாங்கள் பிரிந்து விட்டோம். என் நிலைமையை பற்றி என் குழந்தைகளிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் புரிந்து கொண்டு தன்னை இப்போது அப்பா என்று அழைத்து வருகிறார்கள். ஆனால் இந்த சமூகம் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட ஏற்றுக் கொள்ளாமல் எங்களை போன்றவர்களை ஒதுக்கி வைக்கிறது. நாங்கள் என்ன வேறு கிரக வாசிகளா? உங்களில் ஒருவர் தானே? இருந்தாலும் நிச்சயம் இந்த சமூகம் ஒரு நாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படுமென நான் எதிர்பார்க்கிறேன் என்று தருண் கூறியுள்ளார்.

Categories

Tech |