2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வீராணம் ஈச்சங்காடு பகுதியில் லாரி உரிமையாளரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி தமிழ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குறிஞ்சிதமிழ் தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது குறிஞ்சி தமிழுக்கும் அவரது மாமியாரான முத்தம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தபோது அதனை ராஜேஷ் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் குறிஞ்சித் தமிழ் மற்றும் முத்தம்மாளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ராஜேஷ் இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனை அடுத்து ராஜேஷ் வெளியில் சென்று வருவதாக கூறியுள்ளார். அப்போது நீங்கள் திரும்பி வரும்போது நானும், குழந்தைகளும் உயிரோடு இருக்க மாட்டோம் என குறிஞ்சி தமிழ் உருக்கமாக தெரிவித்துள்ளார். அப்போது அம்மா இனி சண்டை போட மாட்டார் எனக்கூறிவிட்டு ராஜேஷ் வெளியில் சென்றுள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த குறிஞ்சி தமிழ் தனது மகன்களை கொன்று தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.