சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் இருக்கின்ற வனப்பகுதிக்கு சென்ற பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
அதன்பிறகு அந்தப் பெண் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதனை அறிந்து உடனடியாக வனப்பகுதிக்கு சென்ற குடும்பத்தினர், மயங்கிய நிலையில் இருந்த திலீப்குமார் அங்கேயே விட்டுவிட்டு, தங்களின் பெண்ணை மட்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திலீப்குமார் குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. உடனடியாக அவரின் குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு திலீப்குமார் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.