Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குடும்பத்தினரிடையே தகராறு….. 8 பேர் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை…..!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் பேரில் முருகேசன், மோனிஷா, மோகன், தமிழரசி ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் மோனிஷா அளித்த புகாரின் பேரில் பொண்ணு, மணிகண்டன், சுப்பிரமணி, கனகராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |