தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 28 ம் தேதி எண்ணப்பட்டது.
இந்நிலையில் திருச்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஞ்சுளாதேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க் கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் ஜூன் 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.