Categories
உலக செய்திகள்

“2 ஆயிரம் மோட்டார் பைக் பறிமுதல்”… ராட்சத எந்திரம் ஏற்றி நசுக்கல்….!!!!!!!!

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள்களை வாடகை வண்டிகள் ஆக பயன்படுத்தும் பைக் டாக்சி-யால் அதிக அளவில் சாலை விபத்துகள்  ஏற்படுவதாகவும் இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பைக் டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டு தகராறு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்த வகையில் அண்மையில் டாக்சியில் பயணம் செய்த 38 வயதான நபரிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்த டிரைவர் பணம் தராத ஆத்திரத்தில் அந்த நபரை அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பைக் டாக்சிக்கு  தடை விதிப்பதாக அந்த நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் தடையை மீறி வழங்கிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு அவற்றின்மீது ராட்சச இயந்திரத்தை ஏற்றி நசுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |