Categories
சென்னை மாநில செய்திகள்

2 ஆண்டுகால எம்ஏ படிப்பு அறிமுகம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அடுத்த கல்வியாண்டில் (2023-24) இரண்டு ஆண்டுகால எம்ஏ படிப்பை அறிமுகம் செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் M.A., in Development Studies, M.A., in English Studies, M.A., in Economics ஆகிய 3 படிப்புகளை 2 ஆண்டுகால படிப்புகளாக அறிமுகம் செய்யப்படுகின்றன. 5 ஆண்டுகள் Integrated படிப்பாக இருப்பதை, 2 ஆண்டுகள் படிப்பாகவும் அறிமுகம் செய்து, இளங்கலை முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரவும் சென்னை IIT நடவடிக்கை எடுத்து வருகிறது. மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் 2 ஆண்டுகால M.A., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் . ஒவ்வொரு பிரிவிலும் 25% இடங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டாயமாக ஒதுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளது.

Categories

Tech |