Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு… குவியும் மாணவர்கள்… சூடுபிடிக்கும் ஸ்டேஷனரி வியாபாரம்!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஸடேஷ்னரி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது..

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 1 ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேனா, பென்சில் நோட்டுப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் முழு வீச்சில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தொற்றுப்பரவலின் வேகம் குறைந்துள்ளது.

வரும் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பேனா, பென்சில், நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை பெருகி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஸ்டேஷ்னரி கடைகளில் வியாபாரம் நடைபெறாமல் இருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஓரளவுக்கு வியாபாரம் தொடங்கியது.

இந்நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் எழுது பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வாங்க மாணவர்கள் ஆர்வத்துடன் வருவதாக தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வியாபாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டதாக ஸ்டேஷனரி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |