டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது அடுத்து சுமார் 762 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமான பணிகள் வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
இந்த பணிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கோண வடிவில் அமைய உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சாசன அங்ரகு, ஒரு நூலகம், பல்துறை கமிட்டி அறைகள், உணவு அரங்குகள், அனைத்து எபிகலுக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவை இடப்பெறுகின்றன.
இதைப்போல் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட மக்கள் அவை அறை 384 உறுப்பினர்கள் அமர தக்க வகையில் மாநிலங்களவை அறையும் அமைக்கப்படுகிறது. தற்போதிய நிலையில் மக்களவையில் 543 உறுப்பினர்களில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் எதிர்கால தொகுதி விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த பிரம்மாண்ட அறைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.