விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை இயற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.