Categories
கிரிக்கெட் விளையாட்டு

1st அஸ்வின்…. 2nd ரஹானே….. ”கேப்டன்களுக்கு குறி”… தூக்கும் டெல்லி …!!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே, அடுத்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அடுத்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தச் சூழலில் அடுத்த சீசனில் களமிறங்கும் வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பிற அணிகளுடன் வீரர்களை பரிமாறிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த வீரர்கள் பரிமாற்றம் நவம்பர் 14ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவை டெல்லி அணியுடன் பரிமாற்றம் செய்துள்ளனர். அவருக்கு பதிலாக டெல்லி அணியிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்கள் மயாங்க் மார்க்கண்டே, ராகுல் டேவாடியா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணியில் விளையாடிய தவால் குல்கர்னி மீண்டும் தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பியுள்ளார்.

Image result for ashwin delhi capitals

முன்னதாக இந்த பரிமாற்றத்தின் மூலம் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார். இதேபோன்று டெல்லி வீரர் ட்ரெண்ட் போல்ட் மும்பை அணிக்கு மாற்றப்பட்டார். ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடிய அஜிங்கியா ரஹானே, பின்னர் 2011 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கினார். அந்த அணியின் தடைக்காலத்தின்போது புனே அணியில் விளையாடினார்.

பின்னர் மீண்டும் கடந்த இரண்டு சீசன்களில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய அவர் இதுவரை 100 போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கியிருக்கிறார். மேலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் 24 போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.இதுவரை இரண்டு சதம், 17 அரைசதம் உள்ளிட்ட இரண்டாயிரத்து 810 ரன்களை ராஜஸ்தான் அணிக்காக ரஹானே குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |