அதிவேகமாக பந்து வீசி 19 ஆண்டுகளாக அக்தர் வைத்திருந்த சாதனையை 19 வயது பந்து வீச்சாளர் முறியடித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் ஆடிய போது இலங்கை அணியின் 17 வயதான மத்தீஷா பதிரானா 4 ஓவரை வீசினார். அந்த ஓவரில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தார். அப்போது மலிங்கா ஸ்டைலில் இவர் வீசிய பந்து 175 கிலோ மீட்டர் வேகத்தில் பதிவானது.
கடந்த 2003ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 161. 3 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்துவீசி சாதனை படைத்தார். அன்று நிகழ்த்திய இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அவர் வைத்திருந்த சாதனையை பதினேழு வயது பந்துவீச்சாளர் தற்போது முறியடித்துள்ளார். இதனை இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.