நாம் நம்முடைய சிறுவயதில் விமானம் வானில் பறக்கும் சத்தத்தை கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து அதை அன்னார்ந்து பார்ப்போம். நாமும் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கும். அப்படி ஒரு எண்ணம் தான் மைத்திரி பட்டேல் என்ற பெண்ணிற்கு வந்துள்ளது. அதன் முயற்சியாகத்தான் தற்போது அந்த பெண் தனது 19 வயதில் கமர்சியல் பைலட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் மைத்திரி பட்டேல். இவருக்கு சிறுவயதிலிருந்தே பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இவரது தந்தை காந்திலால் பட்டேல் ஒரு விவசாயி. தாய் சூரத் முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் சுகாதார பிரிவில் பணியாற்றி வருகிறார்.
வீட்டில் வறுமை கடினமான சூழல் ஆகியவற்றையும் கடந்து இளம் வயதில் விமானியாக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்று விமானம் ஓட்ட பயிற்சி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது மகளின் கனவை நிறைவேற்ற நினைத்த காந்திலால் பலமுறை தனது மகளுடன் மும்பையில் இருந்து விமான நிலையங்களில் விமானம் ஏறி இறங்குவதை பார்வையிட்டுள்ளார். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலை தனது மகளை ஆங்கில வழியில் படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார் காந்திலால் பட்டேல். இருப்பினும் தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது பூர்வீக சொத்துக்களை விற்று தனது மகளின் விமான பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டார்.
விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி 18 மாதங்கள். இந்த பயிற்சியை முடிப்பவர்கள் வெகு சிலர் தான். ஆனால் மைத்திரி இந்த பயிற்சியை வெறும் 11 மாதங்களில் முடித்தார். தற்போது அவர் கமர்சியல் பைலட்டாக மாறியுள்ளார். மேலும் மைத்திரி கேப்டனாக மாறி போயிங் விமானத்தை ஓட்ட வேண்டும் என்ற கனவில், அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார். 11 மாதம் கழித்து அமெரிக்காவிலிருந்து கமர்சியல் பைலட் லைசென்ஸ் உடன் இந்தியா திரும்பினார். அவரை அவரது பெற்றோர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். சிறுவயதில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் வாங்கிய மைத்திரியை குஜராத் முதல்வர் பாராட்டியுள்ளார். ஒரு விவசாயி மகள் விமானம் ஓட்டும் கமர்சியல் பைலட்டாக மாறி இருப்பதை நினைத்து பெருமைபடுவதாக கூறினார்.