கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, சதீஷ் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
Categories
19 பதக்கங்களை வென்று சாதனை…. அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!
