பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில் பெண் குழந்தை இருந்து வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 நாட்களுக்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது உள்ளது.
பிரசவத்திற்கு பின் இருசன் வேலைக்ககாக வெளிமாநிலத்திற்கு சென்றுள்ளார். லலிதா அவரின் மாமனார், மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் குழந்தை நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தது. அதனால் சத்தம் கேட்டு அறையில் இருந்து எழுந்து வந்த மாமனார், மாமியார் லலிதாவின் படுக்கை அறைக்கு சென்று பார்த்து உள்ளனர். அங்கே குழந்தை மட்டும் அழுது கொண்டி இருந்தது. ஆனால் லலிதாவை காணவில்லை.
அதனால் சந்தேகம் அடைந்த இருவரும் வீட்டின் அறைகளில் தேடிஉள்ளனர். அப்போழுது பூஜை அறையில் லலிதா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் சத்தம் போட்டனர். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து தொங்கிய நிலையில் இருந்த லலிதாவின் உடலை கீழே இறக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் காவல்துறையினர் லலிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லலிதாவின் பெற்றோர் தெரிவித்து உள்ளார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து உள்ளார். லலிதாவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையா? இல்லை எனில் 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து உள்ளாரா? என்று கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விசாரணை செய்து வருகின்றார்.