நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திரிணாமூல் கட்சியை சேர்ந்த ஏழு பேரையும், திமுகவை சேர்ந்த ஆறு பேரையும், மேலும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த மூன்று பேரையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பேரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரை இடைநீக்கம் செய்தனர். மொத்தம் 19 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் தெரிவித்ததாவது: “விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பலமுறை தெரிவிக்கப்பட்டது. ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அமைதி காக்குமாறு வலியுறுத்தியபோதும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.