Categories
தேசிய செய்திகள்

18ம் தேதி டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகும் டவ்-தே புயல் வரும் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் லட்சத்தீவு – மத்திய கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. கேரளத்தில் உள்ள கண்ணூரில் இருந்து மேற்கு தென்மேற்கில் 310 கிலோமீட்டர் நகர்ந்து புயல் சின்னமாக வலுவடையும். புயல் சின்னம் மேலும் தீவிரமடைந்து டவ்-தே புயலாக வலுவடைய கூடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |