Categories
தேசிய செய்திகள்

1,811 அரசு சாரா நிறுவனங்களின் NGO லைசன்ஸ் ரத்து…. மத்திய மந்திரி சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை எப்சிஆர்ஏ விதிகளை மீறிய 1811 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு வெளிநாட்டு நிதி பெறும் என்ஜிஓக்கள், எப்சிஆர்ஏவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில் 1811 அரசு சாரா நிறுவனங்களிலும் வெளிநாட்டு நிதியானது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதன் காரணமாகத்தான் அந்த நிறுவனங்களின் என்ஜிஓ  லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மந்திரி கூறியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டு நன்கொடைகளை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |