இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 180 மாவட்டத்தில் புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கடந்த 7 நாட்களில் 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். கடந்த 14 நாட்களில் 18 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் பதிவு செய்யவில்லை என்றும், கடந்த 21 நாட்களில் 54 மாவட்டத்தில் எந்த பாதிப்பும் பதிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் 10 மாநிலங்களில் அதிக அளவில் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.