Categories
உலக செய்திகள்

திடீர் துப்பாக்கி சூடு…. மேயர் உட்பட 18 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் . இந்த தகவலை அரசு வழக்கறிஞரான மில்லேனோயோ சான்ட்ரா லஸ் என்பவர் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் சாதாரணமானது அல்ல. மேலும் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸின் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |