Categories
உலக செய்திகள்

18 தோட்டாக்கள்… பாக்கெட்டில் இருந்த துண்டுச் சீட்டு… பிரபல மாடல் அழகி படுகொலை…!

பிரபல மாடல் அழகி சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல மாடலான 47 வயதுடைய ரெபேக்கா லாண்ட்ரித் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை யூனியன் கவுண்டி பகுதியில் சாலையோரத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதனை கண்ட போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது உடலில் 18 முறை துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது பாக்கெட்டில் ஒரு நபரின் பெயர் எழுதிய சீட்டு இருந்துள்ளது.ஆகவே இதனை படுகொலையாக எடுத்துக்கொண்டு, போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மைல் தொலைவில் உள்ள கனெக்டிகட்டில் இருந்த ஒரு வாகனத்தில் ரத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் உரைகளும் இருந்துள்ளது.

இதனை கண்டறிந்த போலீசார் வாகனத்திற்கு சொந்தக்காரரான 28 வயதான ட்ரேசி ரோலின்ஸ் என்பவரை கைது செய்தனர். அது மட்டுமின்றி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி மற்றும் அவரது மொபைல் போன் தகவல்களை வைத்து இவர் கொலைகாரர் என்று ஆதாரம் சேமிக்கப்பட்டது. ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு மற்றும் சடலத்தை துஷ்பிரயோகம் செய்த, உள்ளிட்ட வழக்குகளை போலீசார் பதிவுசெய்தனர்.

Categories

Tech |