பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் 50 சதவீத தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும்.காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தின் போது சிலர் ஆஃபர்கள் வழங்கப்படும். அதற்காக சில விளம்பரங்கள் வெளியிடப்படும்.
இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அமேசானில் ‘வேலண்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகு சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் வாங்கலாம். அதிலும் குறிப்பாக 18 முதல் 24 வயது உடையவர்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50% தள்ளுபடி பெறலாம். பெண்களுக்கு பரிசுகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன.