Categories
சினிமா

18 வருடங்களுக்கு பிறகு…. இது ஒரு மகிழ்ச்சியான நாள்…. பாலா குறித்து சூர்யா பெருமிதம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா.  சூர்யாவின் நடிப்பில் தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் 41வது படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த 41வது  படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று இயக்க தொடங்கியதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நந்தா மற்றும் பிதாமகன் படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதோடு ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள்.

அதன் பிறகு 18 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இணையும் இந்தப் படம்  2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சூர்யா வலைத்தளங்களில் தெரிவித்துள்ளதாவது,”எனது மென்டர் டைரக்டர் பாலா ஆக்சன் சொல்வதற்காக காத்திருக்கிறேன். 18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்த நேரத்தில் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் தேவை என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்”.

Categories

Tech |