இந்திய நாட்டில் ஒருவர் கடந்த 18 வருடங்களாக தினந்தோறும் 4,000 கிளிகளுக்கு உணவு கொடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு கிளி நின்றுள்ளது. அந்த கிளிக்கு ஜோசப் உணவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜோசப் ஒரு கிளிக்கு உணவு கொடுத்தால் மறுநாள் ஏராளமான கிளிகள் வந்துள்ளது. அவர் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த அனைத்து கிளைகளுக்கும் உணவு கொடுத்துள்ளார்.
இப்படி சிறிய கிளி கூட்டங்களாக வர ஆரம்பித்து அவை தற்போது 4,000 கிளிகள் ஆக மாறியுள்ளது. இந்த 4,000 கிளிகளுக்கும் தினந்தோறும் ஜோசப் உணவு கொடுக்கிறார். இவர் கிளிகளுக்கு உணவு வாங்குவதற்காக தினந்தோறும் 1,000 ரூபாய் செலவு செய்கிறார். மேலும் சக மனிதர்கள் மீது கூட இரக்கப்படாத சிலர் இருக்கும் காலகட்டத்தில் கிளிகளுக்காக உணவு வாங்கிக் கொடுக்கும் நபரை பார்க்கும்போது பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.