தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது .
மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த நாட்களாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதையடுத்து மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.