18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஆந்திராவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் தற்போது ஆந்திராவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.