தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அடுத்தடுத்து மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், பிரியா தனது சமூகவலைதளத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்துடன், “18 வயதில் ஆசைப்பட்டு தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்” என தான் புது வீடு வாங்கியதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.