17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சிறுமி பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்லத்துரையை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.