Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

17 நாட்களுக்கு பிறகு …. பேராலயத்தில் வழிபட அனுமதி …. அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ….!!!

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பிராத்தனை செய்ய  அனுமதி வழங்கப்பட்டது. 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது .இந்தப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது . ஆனால் கொரோனா  தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது .அத்துடன் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ,பலசரக்கு கடைகள் ஆகியவை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மூடப்பட்டது.

இந்நிலையில் ஆண்டு விழா முடிவடைந்த நிலையில் 17 நாட்களுக்குப் பின் மீண்டும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் வழிபட  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும் , வாகனங்கள் மூலமாகவும் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குச் சென்று பிராத்தனை செய்து வழிபட்டனர். இதனால் அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Categories

Tech |