Categories
தேசிய செய்திகள்

அசந்து தூங்கிய தொழிலாளர்கள்…. நசுக்கி சென்ற சரக்கு ரயில்…. 17 பேர் பரிதாப பலி …!!

மும்பையில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளானதில் 17பேர் உயிரிழந்துள்ளார் .

மும்பையில் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர் மீது ரயில் ஏறியதில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான உயிரிழப்புகள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க இதுபோன்ற ஒரு துரதிஷ்டவசமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் வருகின்றது.

முன்னதாக நேற்றைய தினம் ஆந்திராவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு இதில் 12பேர் உயிரிழந்தனர். தற்போதைய செய்தியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மார்ச் 24ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் சென்று கொண்டிருப்பது சரக்கு ரயில் சேவை இயங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பகட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது மத்த்யபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. அதே போல  இவர்களை ரயில் நிலையத்தை கடக்க முயன்றார்களா ? அல்லது ரயில் வரத்து என்று தூங்கிக்கொண்டு இருந்தார்களா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |