Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபோனி புயல், தற்போது, கடுமையான புயலாக மாறியுள்ளது ,என்றும், கஜபுயலை விட இருமடங்கு அதிதீவிர புயலாக உருவெடுத்து  ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல், 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஃபோனி புயல் வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து வருவதால் வருகின்ற 3_ஆம் தேதி பிற்பகல் ஒடிசா மாநிலத்தின்  கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. ஃபோனி புயல் கரையை கடக்கும் போது, 1 மணிக்கு சுமார் 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும் என தெரிவித்ததால் ஒடிசா மாநிலத்தின்  17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |