தெற்கு லண்டனில் ரூட் 122-ல் சென்ற 2-ம் தேதி சென்று கொண்டிருந்த பேருந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் பயணித்தார். இந்நிலையில் அப்பெண்ணை அணுகிய ஒரு நபர் அவரை கட்டிபிடித்து முத்தமிட முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை தள்ளிவிட்ட டீன் ஏஜ் பெண் பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்றார். அதன்பின் அப்பெண் நடந்தது தொடர்பாக தாயாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவற்றில் இருக்கும் நபரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆகவே அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை அடையாளம் கண்டால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.