சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிவீராணம் பகுதியில் விமல்ராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமல்ராஜ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த போலீசார் விமல்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் விமல்ராஜூக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.