திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார்.
உன்னாவ் பெண்ணின் மரணத்தின் சோகம் மறைவதற்குள் முன்னாள் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . எரிக்கப்பட்ட சிறுமி 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி போனதால் சிறுமியை காப்பாத்த முடியவில்லை .
திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி அஜோய் என்பவரை சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி காதலித்துள்ளார். கடந்த தீபாவளியின் போது சிறுமியை சந்தித்த அஜோய் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார் .அஜோயின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்த சிறுமியை சாந்திபஜார் பகுதியில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.இதனிடையே சிறுமியை ரூபாய் 50,000 பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக அவரது குடும்பத்தினரிடம் அஜோய் மிரட்டி உள்ளார். மேலும் சிறுமியை அஜோயும் அவரது நண்பர்களும் சேர்ந்து 2 மாதமாக கடுமையான பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் . கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமியின் தாய் அஜோயிடம் 17,000 ரூபாய் கொடுத்துள்ளார். இவ்வளவு தான் எங்களால் கொடுக்க முடியும் இதற்கு மேல் பணமில்லை என்று தன் குடும்ப சூழ்நிலையை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜோய் சிறுமியின் உடல் முழுவதும் மண்ணெண்னையை ஊற்றி எரித்துள்ளார். இதில் சிறுமியின் தாயாரும் சிறிது பாதிப்படைந்துள்ளார் . அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு அவசர சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி போய் சிறுமி உயரிழந்தார்.