Categories
தேசிய செய்திகள்

17 நாட்களில் 15 நாட்கள் பிரதமர் ஆப்சென்ட்…. பதாகை ஏந்திய காங்கிரஸ் எம்.பிக்கள்….!!! 

நடப்பு கூட்டத்தொடர் அமர்வில் 17 நாட்களில் 15 நாட்கள் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று வருகைப் பதிவு பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய 14ஆம் தேதி வருகை தந்த பிரதமர் மோடி அதன் பின் 15 நாட்கள் ஆப்சென்ட் என்று தேதிவாரியாக பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மணி தாகூர் தனது ட்விட்டர் பதிவில் : “17 நாட்கள் நடைபெறும் லோக்சபா அமர்வில் பிரதமர் மோடி 2 நாள் தான் ஆஜரானார். 15 நாட்கள் காணவில்லை” என அதில் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடியின் வருகை பதிவு விவரங்களோடு காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதாபன் மற்றும் மாணிக்கதாகூர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.

Categories

Tech |